மன்னாரில் அரச பேருந்துகளின் ஆவணங்கள் சோதனை
மன்னாரில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்துகள் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால் நிறுத்தப்பட்டு ஆவணங்கள் சோதனையிடப்பட்டுள்ளன.
மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று (06.12.2023) காலை புறப்பட்ட அரச பேருந்துகளே மன்னார் நகர சுற்றுவட்டப் பகுதியில் வைத்து சோதனையிடப்பட்டுள்ளன.
சோதனை நடவடிக்கை
மக்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் (6) காலை அரச பேருந்து ஒன்று நகர சுற்றுவட்ட பகுதியில் திடீரென நிறுத்தப்பட்ட போது தடுப்பு விளக்கு ஒளிராத நிலை காணப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பேருந்தின் ஆவணங்களை சரி பார்த்த போதும் ஆவணங்கள் இருக்காத நிலை காணப்பட்டதுடன் அபராதம் விதிக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமையினால் பேருந்துகள் சில மணிநேரம் காத்திருந்தமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
மேலும் சில பேருந்துகள் சோதனை செய்யப்பட்ட நிலையில் உரிய ஆவணங்கள் காணப்படாத நிலையில் தடுப்பு விளக்கு ஒளிராத நிலை காணப்பட்டது. அத்துடன் பயணிகள் மற்றும் அலுவலகங்களுக்கு கடமைக்குச் செல்வோர் என பலரும் தாமதங்களை எதிர் கொண்ட நிலையில் மன்னார் சாலை அதிகாரிகள் வருகை தந்து பொலிஸாருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது பேருந்துகளின் தடுப்பு விளக்கு உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளை உடன் நிவர்த்தி செய்யுமாறு பொலிஸாரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அரச பேருந்துகள் பொலிஸார் இடைமறிப்பது இல்லை. ஆவணங்களும் பார்ப்பது இல்லை. ஆவணங்கள் அனைத்தும் அலுவலகத்தில் உள்ளது. ஆனால் இன்றைய தினம் பயணிகளுடன் சென்ற பேருந்தை நிறுத்தி ஆவணங்களை காட்டுமாறு கோரியுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் சாரதியின் ஆசன பட்டி உள்ளதா, தடுப்பு விளக்கு ஒளிர்கின்றதாக என பரிசோதித்தனர். மூன்று பேருந்துகளுக்கு எதிராக தண்டமும் விதித்துள்ளனர்.
இவ்வாறு பல தடவைகள் இடம்பெற்றுள்ளது. இதனால் பயணிகள் பாதிக்கப்படுவதாகவும் மன்னார் சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
