வவுனியா பொது வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
நேற்றையதினம் (12.09.2023) வவுனியா பொது வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றிருந்தது.
நாடு முழுவதும் அமைதி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்திருந்தது. அதற்கு அமைவாகவே குறித்த ஆர்ப்பாட்டம் வவுனியாவிலும் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் 'மருந்துகள் இல்லை. சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது, தனியார் மருத்துவத்தை வளர்க்க இலவச மருத்துவத்தை அழிக்காதே, வைத்தியர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து, திறமையற்ற சுகாதார நிர்வாகிகளே வைத்தியர்களின் தொழில் உரிமையில் கை வைக்காதே'என எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
அத்துடன், இலங்கையில் இருந்து பல வைத்தியர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாது மருந்துகள் பற்றாக்குறை காணப்படுகின்றது.
வைத்தியர்களின் வெளியேற்றதால் எமது சுகாதார துறை மேலும் பலவீனம் அடையும். எமது கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியும் எமக்கு தீர்வு கிடைக்காமையால் ஆர்ப்பாட்டத்தை செய்துள்ளோம்.
இதற்கும் தீர்வு இல்லையெனில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா பிரதிநிதிகள், வைத்தியர்கள்
எனப் பலரும் கலந்து கொண்டனர்.













ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 23 மணி நேரம் முன்

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
