நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்! ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை
நாட்டின் தேவைகளுக்கும் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கைகளுக்கும் ஏற்ப போட்டிப் பரீட்சைகள் மூலம் புதிதாக இணைக்கப்படும் வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
வைத்திய நிபுணர்களை உருவாக்குவதில் நிலவும் தனி உரிமையை மாற்றுவதற்கு ஜனாதிபதி உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் (16.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வருடாந்திர இடமாற்ற இறுதிப் பட்டியல்
அவர் மேலும் தெரிவிக்கையில், அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் நிபுணத்துவ வைத்தியர்களுக்கான வருடாந்திர இடமாற்ற இறுதிப் பட்டியலைச் சுகாதார அமைச்சு வெளியிடத் தவறியுள்ளமையால், நிபுணத்துவ வைத்தியர்கள் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வெளிப்புறத் தலையீடுகள் இன்றி டிஜிட்டல் முறையில் தானாகவே இந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த வழியிருந்தும், பல்வேறு தரப்பினரின் செல்வாக்கால் இது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தேவைகளுக்கும் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கைகளுக்கும் ஏற்ப போட்டிப் பரீட்சைகள் மூலம் புதிதாக இணைக்கப்படும் வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளது.
அத்துடன், வைத்திய நிபுணர்களை உருவாக்குவதில் நிலவும் தனி உரிமையை மாற்றுவதற்கு ஜனாதிபதி உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என கோரியுள்ளார்.
இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட ஷிரான் பாஸிக் தொடர்பில் திடுக்கிடும் தகவல் : பொலிஸார் விடுத்துள்ள தகவல்கள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்