நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்: அவதியுறும் மலையக மக்கள்
நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக மலையகத்தில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாமல், அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
சட்டவிரோதமாகவும், அரசியல் உள்நோக்கத்துடனும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ இடமாற்றங்களை எதிர்த்து, இன்று (31.03.2026) காலை 8 மணி முதல் நாளை (01.04.2026) காலை 8 மணி வரை வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
அவதியுறும் மக்கள்
இதனால் நோயாளர் விடுதி, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு போன்ற சில சேவைகளில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்தியர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள், அதே நேரத்தில் வெளிநோயாளர் பிரிவு, மாதாந்த பரிசோதனை பிரிவு போன்ற சேவைகளில் வைத்தியர்கள் முற்றிலும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதே சமயத்தில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேறு சிகிச்சை பிரிவு சேவைகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து வழங்கப்படுவதாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தீவிரமடையும் பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் தொடர்ச்சியாக இரத்து