உங்களுக்கு இவ்வாறான புதிய அறிகுறிகள் தென்படுகிறதா? வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை
சமகாலத்தில் இலங்கையில் பரவும் புதிய கோவிட் வைரஸின் மாறுபாட்டினால் விசேட நோய் அறிகுறிகள் காண முடிந்துள்ளதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் கோவிட் தொற்றியவர்களுக்கு தொண்டை வலி ஏற்படும். எனினும் புதிய மாறுபாடு காரணமாக நோயாளி ஒருவருக்கு ஆரம்பத்திலேயே நியுமோனியா நிலைமை ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படும்.
நோய் நிலைமை தீவிரமடையும் வரை அவருக்கு கோவிட் தொற்றியுள்ளதா என்பது தொடர்பில் அறிய முடியாமல் போய்விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் நோய் நிலைமை தீவிரமடைந்த பின்னர் சிகிச்சை வழங்குவது கடினம் என அவர் கூறியுள்ளார்.
வார இறுதி விடுமுறையின் போது அனைவரும் உரிய சுகாதார முறைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருவருக்கு மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்தால், ஒன்றில் இருந்து 10 எண்ணும் வரை மூச்சை பிடித்து வைக்க முடியவில்லை என்றால், முச்சு திணறல் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெற வேண்டும்.
அவ்வாறு செய்தால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு செல்வதனை தவிர்க்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.