கொழும்பின் முக்கியமான வைத்தியசாலையில் போலி மருத்துவர்
போலியான தொழில் தகுதிகளை முன்வைத்து, கொழும்பு றிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் பிரதான நிர்வாக பதவியை வகித்து வரும் மருத்துவர் குறித்து இலங்கை மருத்துவச் சபைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
சிறுவர் நோய் தொடர்பான சிறப்பு நிபுணர் என காட்டி அந்த மருத்துவர் நிர்வாக பதவியை வகித்து வருகிறார் என முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
போலியாக தன்னை சிறப்பு மருத்துவர் நிபுணர் என காட்டுவது மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் தண்டனை பெறக்கூடிய குற்றம்.
இந்த மருத்துவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தன்னை சிறப்பு மருத்துவ நிபுணர் எனக் கூறி ஊடகங்களில் தோன்றி வருகிறார் எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண மருத்துவர் ஒருவர் தன்னை சிறப்பு மருத்துவ நிபுணர் என காட்டிக்கொள்வது மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தும் எனவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan