வைத்தியரின் மோசமான செயல் - உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தாய்
அனுராதபுரம், ஹபரணை கிராமிய வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை உத்தியோகபூர்வ விடுதியில் வைத்து 14 வயதுடைய சிறுவனை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் வைத்தியரை ஹபரணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான வைத்தியர் 36 வயதுடைய, அனுராதபுரம் - சாலியவெவ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
வைத்தியரின் மோசமான செயல்
பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் அதே வைத்தியசாலையில் செவிலியராக பணி புரிந்து வருகின்றார்.
கடந்த 18ஆம் திகதி இரவு நேரத்தில் சிறுவன் தனது தாயாரைச் சந்திப்பதற்காக வைத்தியசாலை வளாகத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது சந்தேக நபரான வைத்தியர் சிறுவனை வைத்திய விடுதி அறைக்கு அழைத்துச் சென்று தவறான செயற்பாட்டுக்கு உட்படுத்தியுள்ளார்.
இதனை ஹபரணை பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவத்திற்கு முகங்கொடுத்த சிறுவனிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் இந்த வைத்தியரை கைது செய்துள்ளனர்.
தற்போது குறித்த சிறுவன் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், ஹபரணை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
YOU MAY LIKE THIS VIDEO