கோவிட் தொற்றுநோயிலிருந்து மீள்வதற்கு முன்னர் தடுப்பூசியை பெற வேண்டாம் - சுகாதார அதிகாரிகள்
கோவிட் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்றுநோயிலிருந்து மீள்வதற்கு முன்னர் கோவிட் தடுப்பூசியைப் பெற வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
செய்தி மாநாடு ஒன்றில் உரையாற்றிய சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத், சிலர் நோய்த்தொற்றுக்கு மத்தியில் தடுப்பூசி பெற முனைகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர், தடுப்பூசி போட்டால் அதில் பயனில்லை. எனவே, தொற்றிலிருந்து குணமடைந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு தடுப்பூசி போடப் பரிந்துரைக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதிலும் இலங்கை ஆபத்திலிருந்து வெளியில் வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
பல மாத கால ஊரடங்கு உத்தரவுகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் நாடு செல்ல முடியாது.
எனவே, நாட்டில் மற்றொரு அலையைத் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்களையும், நடைமுறைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
