தமிழர் விடுதலைக்கூட்டணியை அபகரிக்கும் கூட்டத்திற்கு செல்ல வேண்டாம்: சங்கரி தெரிவிப்பு
தமிழர் விடுதலைக் கூட்டணி என்கின்ற பாரம்பரிய காட்சியினை ஒரு குழுவினர் அபகரிக்கும் நோக்கில் நடாத்தப்படவுள்ள கூட்டத்திற்குச் செல்ல வேண்டாம் எனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பிய செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டதாவது,
நாளையதினம் ஒரு கூட்டம் நடாத்தப்படவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 29 ஆம் திகதி நியமனங்களும் இடம்பெறவுள்ளதாக அறிகிறேன்.
தமிழ் விடுதலை கூட்டணியை அபகரிக்கும் நோக்கில் சில மோசடிக்காரர்களால் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத நடவடிக்கைக்கு எதிராக எனது சட்டத்தரணி ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
ஆகவே குறித்த சட்ட விரோதமான குழுவை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனத் தமிழர்
விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியினால்
கையெழுத்திடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 3 மணி நேரம் முன்
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam