செல்வாக்கை பயன்படுத்தி கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை! - சனத் ஜயசூரிய
செல்வாக்கை பயன்படுத்தி கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என பிரபல கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தமது பகுதியில் தடுப்பூசி நிலையங்கள் எதுவும் காணப்படாத காரணத்தினால் தாம் சுகாதார தரப்பினரிடம் உதவி கோரியதாகவும், எவ்வித செல்வாக்கையும் பயன்படுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திம்பிரிகஸ்யாய பகுதியில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் ஓர் நிலையம் இருக்காத காரணத்தினால் தாம் பொரளையில் தடுப்பூசி பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் தடுப்பூசி பெற்றுக்கொண்ட விவகாரம் தேவையில்லாமல் பிரச்சாரப்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றுவதற்கு உதவிய மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சனத் ஜயசூரியவிற்கு தடுப்பூசி ஏற்றப்பட்ட விவகாரம் குறித்து விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.





பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
