“நாட்டை இவ்வளவு காலம் மூடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை”
நாட்டை ஒரு வாரத்திற்கு மூடுமாறு கோரிக்கை விடுத்த போதிலும், அரசாங்கம் ஐந்து வாரங்களுக்கு நாட்டை மூடியதாக அரச தாதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய (Saman Rathnapriya) இதனை தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாடு இவ்வளவு காலம் மூடப்படும் என்று தமது தொழிற்சங்கம் எதிர்பார்க்கவில்லை. நாட்டை இவ்வாறு நீண்டகாலமாக மூடுவது பொருளாதாரம் வீழ்ச்சியடைய வழிவகுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் வீழ்ச்சியடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, நாட்டை மீண்டும் திறக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சரியானதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, சுகாதார நிபுணர்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கத் தவறியதால், அடுத்த சில நாட்களில் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.