அரசுக்கு எதிராக எந்த ஒரு செயற்ப்பாட்டிலும் ஈடுபட வேண்டாம் - வசந்தா ஹதபான் கொட
அரசாங்கத்துக்கு எதிராக எந்த ஒரு செயற்பாட்டிலும் ஈடுபட வேண்டாம் என பொது ஜன பெரமுன கல்வி அபிவிருத்தி குழுவின் தலைவி வசந்தா ஹதபான் கொட (Vasantha Hadaban Goda) தெரிவித்துள்ளார்.
பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை மண்டபத்தில் இன்று (30) மாலை இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே இவ்விடயத்தை குறிப்பிட்டார்.
கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற குறிஞ்சாக்கேணி இழுவைப் படகு விபத்தின் போது உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களை சந்திப்பதற்காக கிண்ணியா பிரதேசத்திற்கு வருகை தந்தபோது மூதூர் மற்றும் கிண்ணியா வலயத்தில் கடமையாற்றும் அதிபர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்விஜயத்தின் போது பதில் கடமையாற்றும் அதிபர்களின் மேலதிக கொடுப்பனவு, பதில் கடமையாற்றும் அதிபர்களை நிரந்தரமாக்குதல், 2019 ஆம் ஆண்டு பரீட்சையில் தோற்றி முறையற்ற விதத்தில் முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் (Akila Viraj Kariyawasam) குருநாகல் மற்றும் குளியாப்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு அதிக புள்ளிகளை வழங்கி மஹிந்த அணியினர் என புறக்கணிக்கப்பட்ட விடயம் தொடர்பிலும் ஆராய்வதற்கு வருகை தந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் இலங்கை ஆசிரியர் சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் அதிபர் ஆசிரியர் சம்பள உயர்வானது வழங்கப்பட இருந்த சுபோதினி அறிக்கையின் பிரகாரம் முழுமையாக பெற முடியாமல் தற்போது மூன்றில் ஒரு பங்கு மாத்திரமே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏனைய பிரதேசங்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ள அதிபர்களுக்கான மேலதிக கொடுப்பனவு வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மாத்திரம் வழங்கப்படவில்லை எனவும் அதிகாரிகளின் தெளிவின்மையே இதற்கு காரணம் எனவும் பொது ஜன பெரமுன கல்வி அபிவிருத்திக் குழுவின் தலைவி வசந்த ஹதபான் கொட இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அரசாங்கத்திற்கு எதிரான எந்த ஒரு செயற்பாடுகளிலும் ஈடுபடாமல் நாட்டை முன்னோக்கி செல்வதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.




உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
