கண்ட கண்ட இடங்களில் அரசை விமர்சிக்காதீர்! - பங்காளிகளிடம் பீரிஸ் வேண்டுகோள்
"அரசின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பதற்கு பங்காளிக் கட்சிகளுக்கு உரிமை இருக்கின்றது. ஆனால், அந்த உரிமையைப் பொருத்தமான இடத்திலேயே பயன்படுத்த வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
"பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக்கொண்ட கட்சிகள், பொதுவானதொரு இலக்கை அடைவதற்காகப் பொதுவானதொரு வேலைத்திட்டத்தின் கீழ் இணைவது தான் கூட்டணி அரசாகும். அங்கு கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் இருக்க வேண்டியது ஜனநாயகப் பண்பாகும்.
பயணம் தவறெனில் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு பங்காளிகளுக்கு இருக்கின்றது. அதற்காக ‘மைக்’ கிடைக்கும் இடங்களில் எல்லாம் பொறுப்பற்ற விதத்தில் கருத்துகளை வெளியிடுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.
நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கூட்டம்
நடைபெறும். அமைச்சரவைக் கூட்டமும் இடம்பெறும். அப்போது விமர்சனங்களை
முன்வைக்கலாம். தவறுகளைச் சுட்டிக்காட்டலாம்.
அதனைவிடுத்து கூட்டுப் பொறுப்பை மீறும் வகையில் பொதுவெளியில் விமர்சங்களை
முன்வைப்பது ஏற்புடைய நடவடிக்கை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri