மதுபான சாலையை திறக்க வேண்டாம்: கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
கிளிநொச்சி - பூநகரியில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச பொது அமைப்புகளால் கவனயீர்ப்பு போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணியானது இன்று (05.09.2023) பூநகரி சங்குப்பிட்டி வீதியின் பழைய பிரதேச செயலக வளாகம் முன்றில் இருந்து ஆரம்பமாகி புதிய பிரதேச செயலகம் வரை சென்றுள்ளது.
எதிர்ப்பு பேரணி
பூநகரி பிரதேசத்தின் மையப் பகுதியான வாடியடி பகுதியில் உணவகத்துடன் கூடிய மதுபானசாலை ஒன்று பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஏற்கனவே இயங்கி வருகின்றது.
இந்த நிலையில் அதனை முழுமையாக மதுபான விற்பனை நிலையமாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பிதேச செயலகத்தை சென்றடைந்த பேரணியின் இறுதியில் பிரதேச செயலர் மற்றும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டுள்ளன.
இப்போராட்டத்தில் பூநகரி பிரதேசத்தை சேர்ந்த பொது அமைப்புகள் பெண்கள் வலை அமைப்பு பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |








தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
