அரசாங்கத்தினர் வெளியிடும் கருத்துக்களால் அநாதரவாகியுள்ள மக்கள்! எல்வே குணவங்ச தேரர்
ஊடகங்களை நோக்கும் போது அரசாங்கம் செல்லும் வழியை தெளிவாக காணக்கூடியதாக இருப்பதாகவும் ,அரசாங்கம் கூறும் ஒரு வார்த்தையிலும் நம்பிக்கையில்லை எனவும் எல்வே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான கப்பல் குறித்து வெளியிட்ட விடயங்களில் இது மிகவும் தெளிவாக தெரிந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக நாட்டின் இதயம் போன்ற கொழும்பு கோட்டையில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ய மேற்கொண்டுள்ள திட்டங்களை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.
அரச வளங்களை இப்படி விற்பனை செய்வதால், எதிர்கால சந்ததிக்கு நாடு இல்லாமல் போய்விடும்.
ஒரு சட்டம், ஒரு நாடு பற்றி பேசினாலும் அரசாங்கத்தினர் வெளியிடும் கருத்துக்களால் மக்கள் அநாதரவாகியுள்ளனர் எனவும் எல்லே குணவங்ச குறிப்பிட்டுள்ளார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
