வைத்தியசாலைக்கு வருவதற்கு அச்சப்பட வேண்டாம்! - நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு
வீடுகளில் உள்ள வெவ்வேறு நோய்த் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டால் வைத்தியசாலை நோக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஹர்ச சதிஸ்சந்திர இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். கோவிட் வைரஸ் அச்சம் காரணமாக சிலர் வைத்தியசாலைக்கு வருதை தவிர்த்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இருதய நோய் போன்ற நோய் நிலைமைகளின் போது வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்தால் பாரிய விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வைத்தியசாலைகளில் கோவிட் சிகிச்சை பிரிவு தனியாக இயங்குவதால் அது குறித்த தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
