இயற்கை உரம் அடங்கிய சீன கப்பலை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் – ஜே.வி.பி
இயற்கை உரம் அடங்கிய சீன கப்பலை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என ஜே.வி.பி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
Qingdao Seawin Biotech நிறுவனம் மற்றும் சீன தூதரகம் என்பன இலங்கை அரசாங்கம் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும், இயற்கை உரத்தை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துவதாகவும் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayakke) தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆய்வுகூட பரிசோதனைகளில் குறித்த உரம் நிராகரிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கப்பல் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை இடைநிறுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய உரத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசாங்க அதிகாரிகளுக்கு குறித்த நிறுவனம் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 23ம் திகதி இந்த கப்பல் புறப்பட்டு விட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய ஆணையாளர் நாயகம் எடுத்த தீர்மானம் சரியானது எனவும், அரசாங்கம் இந்த தீர்மானத்தை மாற்றி இயற்கை உரத்தை பெற்றுக்கொள்ளக் கூடாது எனவும் அவர் கோரியுள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
