போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை தமது நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக ஏற்க வேண்டாம்!கனேடிய அரசுக்கு கடிதம்

letter to the government of canada
By Independent Writer Jan 08, 2021 05:30 AM GMT
Report

போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு நபரை தமது நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக ஏற்க வேண்டாம் என உள்ளூர் செயற்பாட்டுக் குழுவொன்று கனேடிய பிரதமரை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை விமானப் படையின் முன்னாள் தலைவர் எயார் சீப் மார்ஷல் சுமங்கல டயஸை ஏற்புடையவர் அல்ல என அறிவித்து அவரது நியமனத்தை மறுக்க தமிழர் உரிமைக்கான குழுமம் குழு கனேடிய அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளது.

போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்படும் எயார் சீப் மார்ஷல் சுமங்கல டயஸை கனடா அரசு விரும்பத்தாக நபராக அறிவித்து தூதுவராக தமது நாட்டுக்கு வருவதற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்று அந்தக் குழு கோரியுள்ளது.

எயார் மார்ஷல் டயஸ் போர்க் குற்றங்கள் இழைத்ததற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக தமிழ் உரிமைக் குழு கூறுகிறது, அது மாத்திரமின்றி `பொதுநலவாய கோட்பாடுகளை` மீறினார் எனவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கனேடிய அரசு எயார் மார்ஷல் டயஸ் வருவதை விரும்பவில்லை, அவர் எமக்கு ஏற்புடையவரல்ல எனும் செய்தியை இலங்கை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என அந்தக் குழு கோரியுள்ளது.

மேலும் அவர் மீது மேலதிகமாக விசாரணை ஒன்றைத் ஆரம்பிக்க வேண்டும், எதிர்காலத்தில் அவர் மீது தடை விதிக்கும் நடவடிக்கை தேவையா என்பதை ஆராய வேண்டும் என்றும் அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் இலங்கையின் இராணுவ மற்றும் கடற்படைத் தலைவர்கள் இப்படியான தர்ம சங்கடத்திற்கு ஆளாகியிருந்தாலும், விமானப் படைத் தலைவர் ஒருவர் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முதல் முறையாக இப்போது எதிர்ப்பு எழுந்துள்ளது.

இராஜாங்க உறவுகள் குறித்த வியன்னா தீர்மானத்திற்கு அமைய, எந்தவொரு நாடும் தமது நாட்டுக்கு தூதுவராக நியமிக்கப்படுபவரை எவ்விதக் காரணமும் கூறாமால் அந்த நபர் விரும்பத்தகாதவர் எனக் கூறி ஏற்க மறுக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. கனடாவும் அந்தத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளன.

கனடாவின் எதிர்ப்பை இலங்கை ஏற்காமல் எயார் மார்ஷல் டயஸ் கனடா வருவாராயின் அவர் மீது போர்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் வாய்ப்புள்ளது.

செஞ்சோலைத் தாக்குதலில் குறைந்தது 53 சிறுமிகள் கொல்லப்பட்டனர், 120ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். அத்தாக்குதல் நடைபெற்ற போது அந்தப் பகுதிக்கு பொறுப்பான வான்படைத் தலைவராக அவர் செயற்பட்டதாக, தமிழர் உரிமைக்கான குழுமம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அந்த வளாகத்தில் சிறுவர்கள் இருந்திருப்பது அவருக்கு தெரிந்திருக்கலாம், எனினும் அடிப்படையில் பொத மக்கள் இலக்கு ஒன்றின் மீது அளவுக்கு அதிகமான தாக்குதலை மேற்கொண்டமைக்கான நம்பத் தகுந்த காரணங்கள் காணப்படுவதாக கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இறுதிக்கட்டப் போரின் போது, போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான 57, 58 மற்றும் 59ஆம் படையணியனருக்கு சிரேஷ்ட அதிகாரி எனும் வகையில் காத்திரமான வான் தாக்குதல் ஆதரவளித்தார் எனவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இராணுவப் படையின் தலைவராக இருந்த ஜெனரல் ஜகத் ஜயசூரிய பிரேசில் நாட்டுக்கு தூதுவராக நியமிக்கப்பட்ட போது, அவர் மீது பல மனித உரிமை அமைப்புகள் போர்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

அவரை நாட்டிலிருந்து வெளியேற்றவும் குரல் எழுப்பப்பட்டது.ஆனால் அது தொடர்பிலான முடிவு வருவதற்கு முன்னர் அவர் நாடு திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US