பரபரப்பாகும் தேர்தல் களம் - நகரும் திக் திக் நிமிடங்கள்! திமுகவிற்கு அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல்
திமுக முன்னிலை வகிக்கும் பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசங்களையே பெற்றுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில் வாக்கு வித்தியாசங்கள் தொடர்பில் திமுகவிற்கு அதிர்ச்சியளிக்கும் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அந்த வகையில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே விஜய்யின் தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது.
முன்னிலை வகிப்பு
அதிமுக 60க்கும் மேற்பட்ட இடங்களிலும், திமுக 50க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றது.
மதியம் 2 மணி நிலவரப்படி, தவெக ஆதிக்கம் செலுத்தும் பல தொகுதிகளில் 10,000 வாக்குகள் முன்னிலை பெற்று வருகின்றதாக தெரியவருகிறது.

ஆனால், திமுக முன்னிலை வகிக்கும் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பலவற்றில் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே முன்னணியில் இருப்பது அரசியல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே திமுக 10,000 வாக்குகள் முன்னிலையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.