ஜோகோவிச்சின் வழக்கின் எதிரொலி தமிழ் குடும்பத்திற்கு அடைக்கலம் வழங்குமாறு கோரிக்கை
நட்சத்திர டென்னிஸ் வீர்ர் நொவாக் ஜோகோவிச்சின் வழக்குத் தீர்ப்பினைத் தொடர்ந்து, நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் குடும்பத்தினருக்கு அடைக்கலம் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த முருகப்பன் குடும்பத்தினர் இன்னமும் தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு வரையில் இந்த குடும்பத்தினர் கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் பிலோயிலாவின் சமூக தடுப்பு நிலையமொன்றில் இன்று வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சரினால் ஒரு கையொப்பம் மூலம் குறித்த தமிழ் ஏதிலிக் குடும்பத்திற்கு வாழ்வினை அளிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தங்களது எதிர்காலம் தொடர்பில் நித்தமும், முருகப்பன் குடும்பத்தினர் அச்சம் கொண்டுள்ளதாக அந்தக் குடும்பத்தின் சட்டத்தரணி காரீனா போர்ட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் டென்னிஸ் வீர்ர் ஜோகோவிச்சிற்கு நீதிமன்றம் வழங்கிய வீசா அனுமதியை, குடிவரவு அமைச்சர் ஒரு கையொப்பம் மூலம் ரத்து செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இதேவிதமாக தமிழ் ஏதிலிக் குடும்பத்திற்கு குடிவரவு அசைம்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் வழங்க முடியும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடேஸ், பிரியா தம்பதியினரும், கோபிகா மற்றும் தார்னிக்கா ஆகியோருக்கு அடைக்கலம் வழங்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
அமைச்சரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏதிலி அந்தஸ்து வழங்குமாறு சட்டத்தரணி மற்றும் இந்தக் குடும்பம் தங்க வைக்கப்பட்டுள்ள கிராம மக்கள் கோரியுள்ளனர்.
