தனது தவறை ஒப்புக்கொண்டார் ஜோகோவிச்
பிரபல டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் தாம் பிழை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் போது தாம் பொய்யான தகவல்களை ஆவணங்களில் பதிவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
சமூக ஊடகங்களின் ஊடாக ஜோகோவிச் இட்டுள்ள பதிவில் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
தமது பயண விண்ணப்பத்தை பூர்த்தி செய்த முகவர் உண்மையான தகவல்களை வழங்கத் தவறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக மேற்கொண்ட பயணங்கள் பற்றிய விபரங்கள் பொய்யானவை என இதன்போது ஒப்புக்கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதற்கு 14 நாட்களுக்குள் எந்தவொரு நாட்டுக்கும் பயணிக்கவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் அவுஸ்திரேலியாவிற்கு பயணம் செய்ய முன்னர் சேர்பியா மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கு ஜோகோவிச் பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமது முகவர் விண்ணப்பத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பிழையான கூட்டில் (வெளிநாட்டு பயணம் பற்றி கேட்கப்பட்டிருந்த கேள்வி) டிக் செய்து விட்டதாக ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
இது ஓர் மனிதத் தவறு எனவும் அதற்காக முகவர் தம்மிடம் மன்னிப்பு கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோகோவிச்சை நாடு கடத்துவது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
