கொழும்பில் பல மணி நேரமாக காத்திருக்கும் தமிழர்கள் (Video)
நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ் மக்கள் எதிர்வரும் 12ஆம் திகதி தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளனர்.
இந்த நிலையில், தலைநகரில் பணி புரியும் பெரும்பாலான இளைஞர்கள் உள்ளிட்ட பலர் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு பயணமாவதை காணக் கூடியதாக உள்ளது.
தீபாவளி தினத்திற்காக அவரவர் தொழில் இடங்களில் வழங்கப்படும் 3 அல்லது 4 விடுமுறை நாட்களில் அவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று மீண்டும் தலைநகரை நோக்கித் திரும்புவது வழமை.
இவ்வாறிருக்க இதற்கான விசேட போக்குவரத்து சேவைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாக காணப்படுகின்றது.
எனினும், இன்றையதினம் கொழும்பு புறக்கோட்டை பேருந்து தரிப்பிட நிலையத்தில் பெருமளவான மக்கள் பல மணி நேரங்களாக காத்துக் கொண்டிருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
கிட்டத்தட்ட வழங்கப்படும் நான்கு விடுமுறை நாட்களில் இரண்டு நாட்களை பயணத்திலேயே செலவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
இது தொடர்பில் எமது குழுவினர் மேற்கொண்ட கள விஜயத்தில் பல்வேறு மக்கள் தங்களது உளக்குமுறல்களை பகிர்ந்து கொண்டனர்.
அவை இதோ,