இலங்கையின் பல பகுதிகளில் தீபத்திருநாள் கொண்டாட்டத்தில் மக்கள்
உலகளாவிய ரீதியில் இந்துக்கள் அனைவரும் இன்றைய தினம் தீபத்திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
கோவிட் பெருந்தொற்று உலகத்தையே ஆட்கொண்டுள்ள இந்த நிலையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி தீபாவளி கொண்டாட்டத்திற்கு மக்கள் நேற்றைய தினமே ஆயத்தமாகியிருந்தனர்.
இலங்கையின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் தீபத்திருநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் தீபாவளி தின பூசை வழிபாடுகள் சுகாதார நடைமுறைகளுக்கமைய சிறப்பாக நடைபெற்றுள்ளன.
இதன்போது மக்கள் சமூக இடைவெளிகளை பேணி முகக்கவசங்களை அணிந்து சுகாதார முறைப்படி பூசைகளில் கலந்து கொண்டதுடன் இதன்போது பாதுகாப்பு கடமையில் பொலிஸார் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
திருகோணமலை செய்திகள் - முபாரக்
ஹட்டன்
மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை இன்று வெகுவிமர்சியாக கொண்டாடி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஹட்டன் அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் உட்பட மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதில் பெருந்திரளான மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டிருந்ததாக தெரியவருகிறது.
ஹட்டன் செய்திகள் - திருமால்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இன்று தீபாவளி தினத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
இதன்போது கோவிட் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு நாடு சுபீட்சம் அடைய வேண்டி விசேட பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு செய்திகளின் - குமார்
மன்னார்
தீபாவளியை முன்னிட்டு மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முகக்கவசங்கள் அணிந்தவாறு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
கோவிட் தொற்றில் இருந்து மக்கள் விரைவில் விடுபடவும், மக்களுக்கு தீபாவளி சந்தோசத்தையும் செழிப்பையும் வழங்க வேண்டியும் இந்த பூஜை வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் செய்திகள் - ஆஸிக்
