இலங்கையில் விவாகரத்துக்களின் எண்ணிக்கையில் உயர்வு
இலங்கையில் விவாகரத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. நாட்டில் 1.2 மில்லியன் குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்திரமான அடிப்படையில் நாட்டில் விவகாரத்துக்கள் அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனி பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை சிரேஸ்ட பேராசிரியர் அனுஷா எதிரிசிங்க இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
இலங்கை சமூகத்தில் பெண்களின் வகிபாகம் மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண்களை பொருளாதார ரீதியில் வலுவூட்ட வேண்டிய கட்டாய கடப்பாடு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதன் மூலம் அவர்களது குடும்பங்களின் நலன்களை உறுதி செய்ய முடியும் என பேராசிரியர் அனுஷா எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
