நாட்டின் இறையாண்மையுடன் விளையாட இடமளிக்க முடியாது: சஜித் பிரேமதாச
நாட்டின் இறையாண்மையை சல்லி காசுக்கு விற்பனை செய்ய இடமளிக்க போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கடந்த காலத்தில் தேசாபிமானம், தேசப்பற்று, இறையாண்மை பற்றி பேசிய அனைத்து கதைகளும் வெற்று பேச்சுக்களாகியுள்ளன எனவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் தூரநோக்கற்ற வேலைகளால், பல்தேசிய நிறுவனங்கள் நாட்டின் இறையாண்மையை தமது கையில் எடுத்து செயற்பட்டு வருகின்றன.
நிறுவனங்களுக்கு தன்னிச்சையாக செயற்பட இடமளித்து விட்டு அரசாங்கம் செய்வதறியாது வேடிக்கை பார்க்கின்றது.
இதற்காகவா 69 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை தெரிவு செய்தனர்?.
அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் தூதுரகங்களுக்கு சென்று அடிப்பணியும் நிலைமையில் நாடு சர்வதேசத்திற்கு முன்னால் கேவலப்படுத்தப்பட்டுள்ளது.
இராஜதந்திரத்தை மறந்துள்ள அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் இறையாண்மையுடன் விளையாடி வருகின்றனர்.
நாட்டின் இறையாண்மையுடன் இவ்வாறு விளையாட எவருக்கும் இடமளிக்க முடியாது. அரசாங்கத்தின் இந்த தான்தோன்றித்தனமான வேலைத்திட்டத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி குரல் கொடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri