கொடூரமான குற்றவியல் நாடாக மாறிய இலங்கை! சிங்கள நாளிதழின் காட்டமான கணிப்பு!(photos)
2500 ஆண்டுகள் பௌத்த வரலாற்றை கொண்ட இலங்கை இன்று கொடூரமான குற்றவியல் நாடாக மாறி வருகிறது.
சிங்கள நாளிதழ் ஒன்றின் ஆசிரியர் தலையங்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில். கற்பழிப்பு, கடத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகம் என்பன ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் நிகழ்கின்றன.
2500 வருட பௌத்த வரலாற்றைக் கொண்ட இலங்கையை கொடூரமான முறையில் குற்றவியல் நாடாக மாறிக்கொண்டிருப்பது காவல்துறையின் பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது.
இலங்கையில் 1971 ஆம் ஆண்டு முதல் பாரிய குற்றச்செயல் இடம்பெற்றது.
ஜே.வி.பியின் கலவரம் இடம்பெற்று ஜே.வி.பியினால் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட போது காவல்துறையினரும் இராணுவமும் இணைந்து ஜே.வி.பியை சேர்ந்த பத்து பேரை சுட்டுக்கொன்றனர்.
1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு எழுச்சியின் இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் ஜே.வி.பியினர் ஒரு காவல்துறை அதிகாரியை கொன்றபோது இராணுவமும் காவல்துறையினரும் இணைந்து ஜேவிபியினர் பலலை கொலை செய்தனர்.
1989 ஆம் ஆண்டு ஒரு நாள் ஜேவிபி இளைஞர்கள் 18 பேர் வெலிமடை பண்டாரவளை வீதியின் இருமருங்கிலும் நீண்ட மரத்தடிகளில் தொங்கியபடி காணப்பட்டனர்.
அதற்கு இணையாக 83 ஜூலை கலவரத்தில் ஆரம்பித்து 2009 இல் முடிவடைந்த ஈழப்போரில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில் போருக்குப் பின்னர் இலங்கையில் கொலை கலாசாரம் முடிந்துவிட்டதாக நினைத்தபோதும், அது நடக்கவில்லை.
அன்றிலிருந்து நாட்டு மக்கள் வாகன விபத்து அல்லது கிணற்றில் விழுந்து விபத்து மரணங்களையே எதிர்பார்த்தனர்.
எனினும் அன்றிலிருந்து பாதாள உலகக் குழுக்களிடையே மோதல்கள் ஆரம்பித்தன. தங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கொல்வதற்கான உடன்படிக்கைகள் பாதாள உலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
இது ஒரு சாதாரண வணிக முயற்சியின் வடிவத்தில் நடந்தது.
ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், செய்தித்தாள்களில் விளம்பரங்கள் மற்றும் கேள்விப்பத்திரங்கள் கோரப்படவில்லை. இந்த நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 35,000 குற்றங்கள் நடைபெறுகின்றன.
2019 ஆம் மற்றும் 20 ஆண்டுகளில், இவற்றில் 16வயதுக்கு உட்பட்ட 289 பதின்ம வயதினர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 16 வயதுக்குட்பட்ட 305 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.. கொரோனா காலத்தில் கடையடைப்பும், கொள்ளையும் அதிகரித்தன. இந்த நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 3,000 திருட்டுகள் நடைபெறுகின்றன.
இவை அனைத்தும் பதிவு செய்யப்பட்ட குற்றங்களாகும். பதிவாகாத குற்றங்களும் அதிக அளவில் உள்ளன. சில குற்றங்கள் பணச் சக்தியால் மறைக்கப்படுகின்றன. மேலும் குற்றங்கள் அரசியல் அதிகாரத்தால் ஒடுக்கப்படுகின்றன. சில காவல்துறை அதிகாரிகள் குற்றங்களை மறைக்க விரும்புகிறார்கள்.
எனவே இந்த சம்பவங்களை நோக்கும் போது இலங்கையின் குற்றப் பாதையில் வெகுதூரம் சென்றுள்ளதாக சிங்கள நாளிதழின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



