டித்வா சூறாவளியால் இலங்கையில் இலட்சக்கணக்கான சிறுவர்கள் பாதிப்பு
டித்வா சூறாவளி ஏற்படுத்திய பேரழிவுகளால் இலங்கையில் 275,000க்கும் அதிகமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.
தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்துத் தடைகள் காரணமாக உண்மையான பாதிப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் அந்த நிதியம் கவலை வெளியிட்டுள்ளது.
இந்த சூறாவளி ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக, வீடுகள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
சிறுவர்கள் பாதிப்பு
இதனால் சிறுவர்களிடையே நோய்த்தொற்று அபாயம், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் கடுமையான உள நெருக்கடி போன்ற அபாயங்களை அதிகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிகாம் கூறுகையில், "சிறுவர்களுக்கு அவசரமாக உதவி தேவைப்படுகிறது.
கோரிக்கை
உயிர் காக்கும் சேவைகள் தேவைப்படும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைச் சென்றடைவது ஒரு காலக்கெடுவுக்கு எதிரான போட்டியாக உள்ளது" என்று வலியுறுத்தினார்.

எனவே, சுத்தமான குடிநீர், அத்தியாவசிய ஊட்டச்சத்துப் பொருட்கள், உள சமூக ஆதரவு மற்றும் அவசரக் கல்வி உபகரணங்களை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தனது முயற்சிகளை அதிகரித்துள்ளதுடன், மேலதிக நிதிக்காக சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam