யாழில் காணி சுவீகரிப்பிற்கு உள்ளான காணி உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்
யாழில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனையிலுள்ள தனியார் காணிகள் காரணமாக இதுவரை மீளக்குடியமராத குடும்பங்களின் விபரங்களையும், பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்புக்கு உள்ளான காணி உரிமையாளர்களின் விபரங்களை பெற்றுக் கொள்ளல் தொடர்பாக குறிப்பிடப்பட்ட நடைமுறைகளுக்கமைவாக விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி எதிர்வரும் 15.09.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை யாழ். மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
அத்துடன், மேலதிக விபரங்களுக்காக யாழ். மாவட்ட செயலக www.jaffna.dist.gov.lk எனும் இணையத்தளத்தையும் பார்வையிட முடியும்.
இதேவேளை, யாழ். மாவட்ட காணிப் பதிவகத்தின் செயற்பாடுகள் 2021.09.06ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சேவைகளாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சேவையின் அவசர அவசியத்தன்மை கருதி காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை தொலைபேசி இலக்கமான 021-2225681 உடன் தொடர்பு கொண்டு முற்பதிவினை மேற்கொண்டு சேவையினைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
