கூட்டுறவு விற்பனை நிலையம் ஊடாக நாளை மட்ட க்களப்பு மாவட்டத்தில் பால்மா விநியோகம்
நாடெங்கும் பழைய விலையில் பால்மாக்களை கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.
ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் கூட்டுறவு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாடெங்கிலும் பால்மா தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தொடர்ச்சியாக பால்மா வகைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 16 கூட்டுறவு நிலையங்கள் ஊடாகவும் பால்மா விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு அரசடியில் உள்ள கூட்டுறவு அபிவிருத்தி சபை வளாகத்திற்கு கொண்டுவரப்பட்ட பாலமாக்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 16கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் கூட்டுறவு கூட்டுறவு அபிவிருத்தி சபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 16கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாகவும் நாளை
முதல் பால்மா பக்கட்டுகளை பொதுமக்களுக்கு வழங்கும் பணிகள் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி
ஆணையாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்தார்.
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜய் சேதுபதி Cineulagam