யாழ்.விவசாயிகளுக்கு எரிபொருள் அட்டைக்கு மண்ணெண்ணெய் விநியோகம்
கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு நாளை முதல் மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நடவடிக்கைகளை நாளை முதல் முன்னெடுக்கவுள்ளன.

எரிபொருள் வழங்குவதில் விவசாயிகளுக்கு முன்னுரிமை
யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கு அவர்களது பயிர்ச்செய்கை நிலங்களின் அடிப்படையில் முன்னர் எரிபொருள் அட்டை வழங்கப்பட்டது.
அந்த அட்டையைக் காண்பித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நாளை முதல் மண்ணெண்ணெய்யைப் பெற்றுக்கொள்ள முடியும்.

முதல் கட்டமாக விவசாயிகளின் தேவை அளவின் 25 சதவீத மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, எரிபொருள் அட்டை இல்லாத விவசாயிகள் நாளை தத்தமது பிரதேச கமநல சேவைகள்
நிலையத்தில் விண்ணப்பித்து எரிபொருள் அட்டையைப் பெற்றுக்கொண்டு நாளை மறுதினமே மண்ணெண்ணெய்யைப்
பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri