குடும்ப பங்கீட்டு அட்டை மற்றும் அடையாள அட்டை பிரதிக்கு எரிவாயு சிலிண்டர் விநியோகம் (Photos)
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் எரிபொருள் நிலையங்களுக்குக் கிடைக்கும் எரிபொருட்களை ஒரு சிலர் பல தடவைகள் பெற்று பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
இந்நிலையில் விவசாயிகள் மற்றும் வான் ஓட்டிகள் டீசலினை பெற்றுக்கொள்ள முண்டியடித்து வருகின்றார்கள்.
மல்லாவி, மாங்குளம், ஒட்டுசுட்டான், முள்ளியவளை, முல்லைத்தீவு, நாயாறு, பதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் கூட்டுறவுச் சங்கங்களில் எரிபொருள் விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றில் பெட்ரோல் உள்ளபோதும் டீசல், மண்ணெண்ணெய் இல்லாத நிலை காணப்படுகின்றது. விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று (23) ஒரு டாங் டீசல் வந்தபோது அது இன்று (24) காலை 10.00 மணிக்கு முடிவடைந்துள்ளது.
புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எதுவித எரிபொருட்களும் அற்ற நிலை காணப்படுகின்றது. அத்துடன், முல்லைத்தீவு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் காணப்பட்டாலும் டீசல் பற்றாக்குறை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு - துணுக்காய் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவப் பிரசன்னத்துடன் எரிபொருள் விநியோகம் இன்று (24) இடம்பெற்று வருகிறது.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று அதிகாலை கிடைக்கப்பெற்ற 6600 லீற்றர் டீசலானது, ஒவ்வொரு வாகனங்களுக்கும் தலா 5000 ரூபாய்க்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது.
இதே வேளை வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளானது வாகனங்களுக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டு, அதே நேரத்தில் இராணுவத்தினராலும் வாகன இலக்கத்தகடுகள் பதியப்பட்ட பின்னரே வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நிற்பதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் இல்லை எனும் பதாகை கடந்த இரு நாட்களாகக் காணப்பட்ட போதும் மண்ணெண்ணெய் விநியோகம் ஒரு குடும்ப அட்டைக்குத் தலா 500 ரூபாய் வீதமே வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகளவான உழவு இயந்திரங்களைக் கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. உழவு இயந்திரம் மற்றும் கனரக இயந்திரங்களின் பயன்பாடுகள் காரணமாக உரிமையாளர்கள் டீசல்களை அதிகளவில் பதுக்கி வருகின்றார்கள்.
இதேவேளை பேருந்து உரிமையாளர்கள் பேருந்துக்கு அதிகளவிலான மண்ணெண்ணெய்யினை விட்டு ஓட்டுகின்றமையினை காணக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறான நிலையில் எரிபொருளின் பதுக்கல் நிலையினை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பிரசன்னமாகியுள்ளார்கள் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
[
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் உள்ள பிரதான எரிவாயு விநியோக நிலையத்தில் பல வாரங்களின் பின்னர் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது.
அதிலும் குடும்ப பங்கீட்டு அட்டை மற்றும் அடையாள அட்டை பிரதிக்கு ஒரு எரிவாயு சிலிண்டர் வீதம் வழங்கப்பட்டு வருகின்றது.
இதனால் மக்கள் வெற்று எரிவாயு சிலிண்டர்களும் நீண்ட வரிசையில் நிற்பதனை அவதானிக்க முடிந்தது.
அத்துடன், இன்றும் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைத்தில் மண்ணெண்ணெய் மற்றும் டீசலை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
குறிப்பாக இன்றைய தினம் விவசாயிகள் மற்றும் கடற்தொழிலாளர்களுக்கு தலா 40 லீட்டர் மண்ணெண்ணெய் வீதம் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகிக்கப்பட்டது.
இதனை பெற்றுக் கொள்வதற்காகவே கடற்தொழிலாளர்களும் விவசாயிகளும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதேவேளை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைம், மற்றும் ஓராங்கட்டை புலோலி
பலநோக்கு கூட்டுறவு, சங்க எரிபொருள் வலப்புறம் நிலையங்களில் டீசலை பெற்றுக்
கொள்வதற்க்காக தனியார் பேருந்துகள், சிற்றூர்திகள் மற்றும் வாகனங்கள்
சூத்திரத்தில் தடுக்கப்பட்டு பொலிஸார் மற்றும் இராணுவ பிரசன்னத்துடன் டீசல்
விநியோகிக்கப்பட்டது.







siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
