பிரதேச சபைகளை கலைத்தால் பொருளாதார நெருக்கடியை தீர்க்கலாம்: ந.திருணாவுக்கரசு(Photo)
ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேச சபையை கலைத்து அல்லது ஒத்தி வைத்து இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு எம்மாலான ஒத்துழைப்பை வழங்குவோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் ந.திருணாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
இன்று(9) காலை செங்கலடி பிரதேச சபையில் இடம்பெற்ற மாதாந்த பொது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதேச சபைக்கான செலவு
இதன்போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “கடந்த 2018ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தலின் பின் 8356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மாதாந்தம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் படி பார்த்தாலும் அண்ணளவாக 15 கோடி ரூபாய்க்கு மேல் இந்த இலங்கை அரசாங்கம் இவர்களுக்கு வழங்குகிறது.
இதற்கு மேலாக போயர்கள் தவிசாளர்களுக்கு தொலைபோசி கொடுப்பனவு,
எரிபொருள் செலவு என்பனவும் வழங்கப்படுகின்றது.
எமது நாட்டில் சில பிரதேச சபைகள் தமது சபைகளை கலைத்து இந்த பொருளாதார நெருக்கடிக்கு தங்களால் இயன்ற ஒத்துழைப்பினை வழங்கியுள்ளன.
ஏறாவூர் பற்று செங்கலடி தவிசாளர் நீங்கள் நினைத்தால் இந்த செங்கலடி பிரதேச சபையினை கலைத்து அல்லது ஒத்திவைத்து இந்த பொருளாதார நெருக்கடிக்கு எம்மால் இயன்ற உதவியை செய்ய முடியும்.
இவ்வாறான திட்டங்களை இந்த பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவிசாளராக உள்ள நீங்கள் கொண்டுவரும் பட்சத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எங்களது பூரண ஆதரவை வழங்கும்.” என தெரிவித்துள்ளார்.
தவிசாளரின் கருத்து
அதற்கு பதிலளித்த தவிசாளர் சி.சர்வானந்தன், “தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினரின் கருத்துப்படி மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆளுகைக்கு கீழுள்ள தங்களது சபைகளை கலைக்க வேண்டுமானால் நாம் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியுடன் கலந்து பேசி அதன் பின் ஏறாவூர் பற்று பிரதேச சபையை கலைப்பதாக முடிவெடுப்போம்”என கூறியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த உறுப்பினர் திருநாவுக்கரசு,“எனது கருத்தை
தவிசாளர், பிழையாக விளங்கியுள்ளார்.
நான் எமது சபையை மாத்திரம் கலைக்க கூறவில்லை. ஒட்டுமொத்த இலங்கையிலுள்ள 341
பிரதேச சபைகளையும் கலைக்க கோரினேன். இப்படி கலைத்தால் நாட்டின் பொருளாதார
நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும்.” என பதிலளித்தார்.



