வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற இயல்புக்கு முரணான செயற்பாடு
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இயல்புக்கு முரணான செயற்பாடொன்று நேற்றைய தினம் (24.03.2025) நடைபெற்ற நிலையில் பலரால் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் ஆலய நிர்வாகத்திடம் முறையிட்டதோடு, ஆலய நிர்வாகத்தினரின் துரித விசாரணை செயல்பாட்டினால் உடனடியாகவே முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது போல் இயல்புக்கு முரணான செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறாதவாறு நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபரால் கோரிக்கை முன் வைக்கப்பட்டதை அடுத்து ஆலய நிர்வாகம் அதனை ஏற்றுக்கொண்டு இனிவரும் நாட்களில் இதுபோன்று நடைபெறாது பார்த்துக் கொள்வதாக உறுதி மொழியினை வழங்கியுள்ளது.
நடந்தது என்ன?
நேற்றைய தினம் (24) வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு மாலை பூசைக்காக சென்ற போது சைக்கிள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அணியினர் இயல்புக்கு முரணான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளர்.
முச்சக்கர வண்டிக்கான பாதுகாப்பு கட்ணமாக அதில் ரூபா 100 என குறிக்கப்பட்டிருந்தது.
ஆனால், உந்துருளிக்கு நூறு ரூபா கட்டணமாக அறவிடப்பட்டிருந்தது.
தவறுகள் திருத்தப்பட வேண்டும்
இந்நிலையில், ஆலய திருவிழாக்களின் போது வாகனங்களுக்கான பாதுக்காப்பு ஏற்பாடுகள் மற்றும் அவற்றுக்கான கட்டணங்களை அறவிடும் போது பொறுப்புத்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்.
ஆலய நிர்வாகங்களும் முறைப்பாடுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளும் வகையில் சிறந்த ஏற்பாடுகளை ஆலயத்தில் செய்து வைத்திருக்க வேண்டும்.
அத்தோடு வாகன பாதுகாப்பு நிலையங்களில் பயன்பாட்டாளர்களுக்கான சிறந்த வழிகாட்டல்களை செய்து கொடுக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாட்டுகள் தொடர்பில் தங்கள் முறைப்பாடுகளை உடனுக்குடன் தெரியப்படுத்தி தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் அவசியம் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri
