முல்லைத்தீவு வர்த்தக நிலையமொன்றின் செயற்பாட்டினால் அதிருப்தி

Mullaitivu Sri Lanka Northern Province of Sri Lanka
By Uky(ஊகி) Aug 10, 2024 09:17 AM GMT
Report
Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவு தண்ணீரூற்றில் உள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றின் பொறுப்பற்ற நடத்தை தொடர்பில் தங்களின் அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ள சமூக ஆர்வலர்கள் அது தொடர்பில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

நீண்ட நாட்களாக அவதானிக்க கூடியதான இந்த செயற்பாடு முகம் சுழிக்க வைப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தண்ணீரூற்று சந்தைக்கு அருகாமையில் உள்ள இந்த பிரபல வர்த்தக நிலையத்தின் முன்பாக நீர் தேங்கி சதுப்பாக நிலம் மாறியுள்ளதால் அந்த இடத்தில் மக்கள் சிரமத்தினை எதிர்கொள்வதனை அவதானிக்கலாம்.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கோடி ரூபாய் மதிப்புள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தாலி திருட்டு

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கோடி ரூபாய் மதிப்புள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தாலி திருட்டு

அருகில் வர்த்தக வங்கியொன்றும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் மற்றொரு கடையும் கூடவே இருப்பதால் அதிகளவான மக்கள் வந்து செல்லும் இந்த இடத்தில் பிரதான வீதியுடன் இணைந்த இந்த நிலத்தினை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு பேணுதல் அவசியம் என சுட்டிக்காட்டப்படுகிறது.

எண்ணெய்க்கசிவு 

குறிப்பிட்ட வர்த்தக நிலையத்திற்கு முன்னுள்ள நீர் தேங்கி சதுப்பாகிய நிலத்திற்கு சற்று மேலாக எண்ணெய் விற்பனைக்கான கொள்கலன்கள் வைக்கப்பட்டுள்ளது.

dissatisfaction-functioning-trading-mullaithivu-

அவற்றில் இருந்து எண்ணெய்யினைப் பெற்று விற்பனை செய்யும் போது நிலத்தில் சிந்தும் எண்ணெய் மண்ணில் தேங்கி கசிவினை உருவாக்கி விடுகின்றது.

இந்த நிலைமை நீண்ட நாட்களாக இருந்து வருவதாக மக்களில் பலர் குறிப்பிடுகின்றனர்.வர்த்தக நிலைய உரிமையாளர் இதனை தவிர்த்துக்கொள்ள உரிய முறையிலான ஒழுங்கமைப்பினைச் செய்து கொள்ளாமையே இந்த அவலத்திற்கு காரணம் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

சுமந்திரன் நாமல் திடீர் சந்திப்பு

சுமந்திரன் நாமல் திடீர் சந்திப்பு

பிரதேச சபையின் பொறுப்பு 

பரபரப்பாக எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த வர்த்தக நிலையத்தின் முன்னுள்ள பகுதியில் சுத்தத்தினை பேணுவதில் பிரதேச சபையினரும் கருத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும்.

முல்லைத்தீவு வர்த்தக நிலையமொன்றின் செயற்பாட்டினால் அதிருப்தி | Dissatisfaction Functioning Trading Mullaithivu

அதிகளவான மக்கள் வந்து செல்லும் இடமாக இந்த இடம் இருப்பதோடு இந்த வர்த்தக நிலையத்திற்கு அதிகளவான மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு செல்வதற்காக வந்து செல்கின்றனர்.

எண்ணெய் மண்ணில் சிந்துவதால் ஏற்படும் கசிவும் மழைபெய்து தேங்கும் நீரால் ஏற்படும் சதுப்பும் மக்களின் இயல்பான செயற்பாடுகளுக்கு இடையூறாகவே இருந்து வருவது கண்டுகொள்ளப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

கழிவுகளை சீரான முறையில் அகற்றி நகரின் வீதிகளையும் வியாபார நிலையங்களின் முன்றலையும் சுத்தமாக பேணுவதில் வர்த்தக சங்கமும் பிரதேச சபையும் ஒன்றிணைந்து ஒத்திசைவோடு திட்டமிட்டுச் செயற்படுதல் அவசியம் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. 

சிறப்பாக நடந்து முடிந்த சுவிட்ஸர்லாந்து லுட்சேர்ன் மாநகர அம்மன் ஆலய பூங்காவனத் திருவிழா

சிறப்பாக நடந்து முடிந்த சுவிட்ஸர்லாந்து லுட்சேர்ன் மாநகர அம்மன் ஆலய பூங்காவனத் திருவிழா

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு தமிழ் வேட்பாளர்

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு தமிழ் வேட்பாளர்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US