இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறை தொலைபேசி அழைப்பு எடுத்த நபர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறை தொலைபேசி அழைப்புகளை செய்து அதன் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருவாத்தோட்டம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கருவாத்தோட்டம் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொட்டாஞ்சேனை கதிரேசன் தெருவைச் சேர்ந்த தவராஜ் சிங்கம் கிருஷ்ண குமார் என்ற சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது
பிரான்ஸ் தூதரகத்தின் அதிகாரியொருவர் செய்த முறைப்பாட்டின்படி, பிரான்ஸ் தூதரகத்திற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, அருகிலேயே தங்கி குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களை ஏற்படுத்தியதற்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றில் பொலிஸார் தெரிவிதுள்ளனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட சந்தேகநபர் பிரான்ஸ் செல்ல விசா வழங்குமாறு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரான்ஸ் தூதரகத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
மேலும், சந்தேகநபரை பிரான்ஸ் பொலிஸ் அதிகாரி எச்சரித்த போதிலும், தொடர் பிரச்சினை காரணமாக, முறைப்பாட்டாளர் சந்தேக நபருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
