மழை காலங்களில் எதிர்கொள்ளும் அவலம்! பலாலியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கவலை (Video)
சொந்த நிலங்களை விட்டு அகதி முகாமில் வசிக்கும் நாங்கள் மழை காலங்களில் கோவில்களிலும், அரச கட்டடங்களிலும் அகதிகளாக செல்வதும் மழை நின்ற பின் மீண்டும் அகதி முகாமுக்குள் வருவதும் தொடர்கதையாக உள்ளது என இடம்பெயர்ந்துள்ள யாழ். பலாலி கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பொலிகண்டி அகதி முகாம் மக்களை நேற்றுமுன் தினம் (13.11.2022) வலி.வடக்கு வள நிலையத்தினர் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினரும் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களது குறைகளை கேட்டறிந்தனர்.
இது தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் 1990ஆம் ஆண்டு யாழ். பலாலி பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து இப்பகுதிக்கு வந்தோம்.
இராணுவ அபகரிப்பு
யுத்தம் நிறைவு பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் எமது நிலங்களில் நாங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.
எமது காணிகளை இராணுவத்தினர் அபகரித்து பயன் தரும் மரங்களை உண்டாக்கி கட்டடங்களை அமைத்து அபிவிருத்தி செய்து பலன் பெற்று வருகிறார்கள்.
ஆனால் நாங்கள் எதுவும் இல்லாத அகதிகளாக மழை வெள்ளத்திலும் ஓலை குடிசைகளிலும் வாழ்ந்து வருகிறோம்.
கோரிக்கைகள்
மழையால் வீடுகள் முழுவதும் கழிவு நீர் நிறைந்துள்ளது. மலசலக் கூடங்கள் பாவிக்க முடியாமல் சிறுவர்கள் பெண் பிள்ளைகளுடன் நிம்மதியான வாழ்வுக்காக திண்டாடி வருகின்றோம்.
மழையில் பாடசாலை சீருடைகள் புத்தகங்களை கூட பாதுகாக்க முடியவில்லை. பிள்ளைகளின் கல்வி சீரழிந்து போகிறது. பல வருடங்களாக ஜனாதிபதி அரச அதிகாரிகளிடம் கெஞ்சி மன்றாடுகிறோம்.
பலாலியில் உள்ள எமது சொந்த காணியில் எம்மை குடியேற்றம் செய்யுமாறும் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் அதற்கான தீர்வு எமக்கு கிடைக்கவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.











16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
