முல்லைத்தீவில் காணிகள் விடுவிப்பு: அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள தகவல்
முல்லைத்தீவில் காணிகள் விடுவிக்கப்படுவதனால் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை முற்று முழுதாக இல்லாமல் போகின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் (K.Vimalanathan) தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (28) பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து 11 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள காணிகள் 11 ஏக்கர் கடந்த காலங்களில் மக்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டு இராணுவமுகாம் அமையப்பெற்று இருந்தது. அந்த காணிகளை இன்று மக்களிடம் கையளிப்பதற்காக என்னிடம் பாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மக்களுக்கு உடனடியாக பாரம் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். முல்லைத்தீவு மாவட்டத்தினை பொறுத்தமட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் இந்த கிராமத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருந்தது.
அத்துடன் மாவட்டத்தில் இருக்கின்ற இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை முற்று முழுதாக இல்லாமல் போகின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எமது மாவட்டத்தில் இடம்பெயர்ந்தவர்கள் இல்லாத நிலை உருவாகும்.
விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு பிரதேச செயலாளர் ஊடாக ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எதிர்காலத்தில் இவ்வாறு இராணுவ முகாம் அமைந்த காணிகளை மீளவும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றார்கள். அவைகளும் படிப்படியாக எங்களிடம் வழங்க இருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri