எரிபொருள் விநியோகத்தில் உடன் நடைமுறைக்கு வரும் தடை
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளை பெறுவதற்காக நுகர்வோர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடியுள்ளனர்.
இதனால் தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒழுக்காற்று நடவடிக்கை
அதற்கமைய, எடுத்தப்பட்ட இந்த முடிவு நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதற்கு மாறாக செயல்பட்டால், வழங்குபவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ள போதிலும் , நுகர்வோர் இவ்வாறு தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதால் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
