மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கம் - விசேட வர்த்தமானி வெளியானது
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஹமீட் மொஹமட் முஜாஹிர் அதிகார வரம்பை மீறிச் செயற்பட்டதாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ல்ஸினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதி விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் பாவனையிலிருந்ததாகக் கூறப்படும் ஓர் உழவு இயந்திரம் குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சமயம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் அது பிரதேச சபைக்குரியது எனத் தவறாக உரிமை கோரும் கடிதம் வழங்கி நீதிமன்றிலிருந்து உழவு இயந்திரத்தை விடுவித்து அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.
அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் முறைப்பாடு தொடர்பில் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் குழுவின் அறிக்கை மற்றும் உள்ளுராட்ச்சி உதவி ஆணையாளர் ஆகியோரின் பரிந்துரைக்கு அமையக் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய செப்ரெம்பர் 14 ஆம் திகதி தொடக்கம் பிரதேச சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர் ஆகிய பதவிகள் வெறிதாக்கப்பட்டுள்ளது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam