தேசபந்து தென்னகோனின் பதவி நீக்கம் - கட்சிகளின் நிலைப்பாடு
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
தென்னகோனின் நியமனத்தை கட்சி எதிர்த்ததாகவும், நீதிமன்றத்தில் கூட அதை சவால் செய்து கட்சியின் தற்போதைய நிலைப்பாட்டை நிலைநிறுத்தியதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற தீர்மானத்தின் மூலம் நீக்கப்படும்
2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானம் இன்று(05) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.
இது குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு தேசபந்து தென்னகோனை குற்றவாளி என்று அறிவித்தது.
இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், நாடாளுமன்ற தீர்மானத்தின் மூலம் நீக்கப்படும் இலங்கையின் முதல் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் மாறுவார்.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இது தொடர்பில் இன்னும் அதன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
