மாவீரர் தின அனுஷ்டிப்பு தடையுத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்மனு தள்ளுபடி
மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதற்கு எதிராக வழங்கப்பட்ட தடையுத்தரவிற்கு எதிராக செய்யப்பட்ட எதிர்மனு தாக்கல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அரசியல் கைதி செல்வநாயகம் அரவிந்தன் (Selvanayagam Aravind) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மாவீரர் தினத்தினை அனுஸ்டிப்பதற்கு வவுனியா நீதிமன்றினால் 8 பேருக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
கடந்த 22 ஆம் திகதி வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் எதிர் மனு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கின் முழுமையான தீர்ப்பு இன்று (24) வழங்கப்படும் என நீதவானால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் சுகாதார பிரிவினரதும், பொலிஸாரின் அறிக்கையின் படியும் நீதிமன்ற கட்டளையை நீக்க முடியாதென கூறி குறித்த எதிர்மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக இன்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan