வவுனியா நகரில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு
கோவிட் -19 இன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா நகர பகுதியில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்செயற்பாடு பொது மக்களின் நலன் கருதி இன்று (08.05) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் மூன்றாவது அலையின் தாக்கமானது வவுனியாவில் வேகமாக அதிகரித்து வருகின்றது.
இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து பல்வேறு தரப்பினரும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தால் அதிகமாக மக்கள் வந்து செல்லும்
இடங்களான வவுனியா பழைய பேருந்து நிலையம், மீன் சந்தை கட்டிடத் தொகுதி, சந்தை
கட்டிடத் தொகுதி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் கிருமித் தொற்று நீக்கும்
மருந்து விசிறப்பட்டுத் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.











அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
