கிளிநொச்சியில் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் மரணங்களும், கோவிட் தொற்றும் அதிகரித்து வருகின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட நகரப்பகுதி மற்றும் பளை பொலிஸ் நிலையம், பஸ் தரிப்பிடம், பொதுச்சந்தை, வியாபார நிலையங்கள்.பாடசாலை ஆகிய இடங்களுக்குப் பளை இளைஞர் அணியினரால் இன்று (06) தொற்று நீக்கி விசிறப்பட்டுள்ளது.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.
கோவிட் -19 தொற்றானது வடமாகாணத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில் சுகாதார அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பாரிய அளவில் எமக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
சுகாதார பணியாளர்கள் ஆளணி பற்றாக்குறையால் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்ற நிலையில் பளை இளைஞர் அணியானது "கைகொடுப்போம்" என்ற தொணிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் பச்சிலைப்பள்ளியின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனின் உதவியுடன் பளை இளைஞர் அணியால் இன்று இச்செயற்பாடானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவிட் தொற்று காலங்களில் மேலும் பல்வேறுபட்ட கோவிட் -19 ஒழிப்பு சம்பந்தமான செயற்பாடுகளில் ஈடுபட்டு பளை இளைஞர் அணி சுகாதாரத் துறைக்குக் கைகொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam