வவுனியாவில் மீள திறக்கப்படும் பாடசாலைகள்! தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு
வவுனியாவில் மீள திறக்கப்படும் பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
வவுனியா மாவட்டத்தில் 200 மாணவர்களுக்கு குறைவான 85 ஆரம்ப பாடசாலைகள் நாளை (21) முதல் கட்டமாக மீள திறக்கப்படவுள்ளன. ஆகையால் இன்று (20) தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய, வவுனியா, மூன்றுமுறிப்பு ஸ்ரீ குணானந்த ஆரம்ப பாடசாலையில் பாடசாலை சமூகத்தினரால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் மற்றும் பாடசாலை சூழலை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், அப்பகுதி அரச உத்தியோகத்தர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் பாடசாலை சூழல் சுத்தம் செய்யப்பட்டதுடன், மாணவர்களின் மேசை, கதிரைகள், வகுப்பறை கட்டடங்கள் என்பனவும் தொற்று நீக்கம் செய்யப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப தயார்படுத்தப்பட்டன.









அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam