கிளிநொச்சி மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுடனான கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலையை பேணுதல், அசௌகரியங்களை தவிர்க்க நடவடிக்கை எடுத்தல், எரிபொருள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது, எரிபொருளை வர்த்தகர்கள், அரிசி ஆலை உரிமையாளர்களிற்கு இலகு முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
மக்களிற்கு தட்டுப்பாடின்றி பொருட்களை வழங்க வர்த்தகர்கள் ஒத்துழைக்க வேண்டும் என இதன்போது ஆரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் விலை கட்டுப்பாட்டுப்பகுதியினர், உயர் அதிகாரிகள்,
வர்த்தகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
