பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் விசேட கலந்துரையாடல் (Photos)
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துடையாடல் இன்றையதினம் (24.11.2023) தொழில் அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இதன்போது தொழில் துறை எதிர்கொள்ளும் பிரச்சினை பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் வாழ்க்கை செலவிற்கு ஏற்றார் போல அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளம் அதிகரித்ததை போன்று பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்மொழிந்திருந்தோம்.
புதிய ஒரு பொறிமுறை
கடந்த காலங்களை போல் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு நலன்புரி வேலை திட்டங்களும் உள்வாங்கப்பட்டு சம்பள உயர்வை உயர்த்துவதா? அல்லது சம்பள நிர்ணய சபையின் ஊடாக உயர்த்துவதா என்பது தொடர்பில் ஆராய்ந்திருந்தோம். ஆய்வின் முடிவாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் தொழில் அமைச்சர் செயலாளரும் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் உப குழு ஒன்றை அமைப்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டது.
18 பேர் கொண்ட இக்குழுவில் தலா ஆறு பேர் என்ற. ரீதியில் தொழிற்சங்கம் தொழில் அமைச்சு முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றிலிருந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இக்குழு கூட்டு ஒப்பந்தத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் புதிய ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்துதல் தொடர்பிலும் ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கையை ஒன்றினை சமர்ப்பிக்க வேண்டும் என தொழில் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்று ரீதியில் தற்போதைய வாழ்க்கை செலவிற்கு ஏற்றார் போல் வழமை மாறாத சலுகைகளுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தொழில் அமைச்சருக்கு அழுத்தமாக எடுத்துரைத்திருந்தோம்.
மேலும் இந்த கலந்துரையாடலில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சு வார்த்தை நீண்ட நேரம் நடைபெற்றதடன் இப் பேச்சுவார்த்தையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் தொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





