வலி.வடக்கு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலையத்திலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குறித்த பிரதேசங்களை பார்வையிட்டுள்ளார்.
பிரதி அமைச்சர் இன்று(26.05.2026) குறித்த பிரதேசங்களை பார்வையிட்டுள்ளார்.
பலாலி உயர் பாதுகாப்பு வலையம்
பலாலி இராணுவ உயர் பாதுகாப்பு வலையத்திலுள்ள இராணுவ ஆதார வைத்தியசாலை வளாகத்தில் இதற்கான கூட்டம் ஒன்று இன்று(26) காலை இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இராணுவ முகாம்கள் அமைந்துள்ள மக்களின் காணிகளுக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.

மேலும் இராணுவத்தின் படைத் தளங்கள் அமைந்துள்ள பலாலி உயர் பாதுகாப்பு வலையத்தின் ஒவ்வொரு இடங்களையும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன் போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பலாலி இராணுவ கட்டளை தளபதி, இலங்கை இராணுவ தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri