சமூக ஊடக பிரகடனம் தொடர்பான விளக்கமளிக்கும் கலந்துரையாடல்
சமூக ஊடக பிரகடனம் (SMD) தொடர்பான விளக்கமளிக்கும் கலந்துரையாடலும் கருத்தறிதல் விடயமும் நேற்று முன் தினம் (04.10.2025) மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
நாட்டின் ஊடக நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் அடங்கலாக 19 அமைப்புக்கள் கையெப்பமிட்டு மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் சமூக ஊடக பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கலந்து கொண்டவர்கள்
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், இரா.சாணக்கியன், க.பிரபு போன்றோருக்கு சமூக ஊடக பிரகடனத்தின் பிரதிகளும் கையளிக்கப்பட்டிருந்தன.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
நிகழ்நிலை காப்பு சட்டம் என்பது பற்றியும் இதன் போது கருத்துக்கள் பரிமாறப்பட்டது.



