யாழ். மாவட்ட செயலகத்தில் வீதி புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்
யாழ். மாவட்ட வீதி புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (20) யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், அரசாங்கமானது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வடமாகாணத்தின் வீதிகளைப் புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தின் வீதிகளையும் புனரமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வீதி புனரமைப்பு
அத்தோடு, மாவட்டத்தில் புனரமைக்க வேண்டிய வீதிகளின் விபரங்களை துல்லியமான முறையில் தயாரித்து உரிய அமைச்சிற்கு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதற்காக பிரதேச செயலக ரீதியாக புனரமைக்க வேண்டிய வீதிகளின் விபரங்களை வீதிகளுக்குரிய வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து சரியான முறையில் தயாரித்து மாவட்டத்தின் மொத்த தேவைப்பாடுகளை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக புனரமைப்பு செய்ய வேண்டிய வீதிகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதி, உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
