போதையிலிருந்து யாழ்.மாவட்டத்தை பாதுகாக்க வேண்டும்!கடற்றொழில் அமைச்சர் வலியுறுத்து
யாழ்ப்பாண மாவட்டத்தை போதையிலிருந்து பாதுகாப்பதற்கான பாரிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு என கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (14) இடம்பெற்ற சகல விஷ போதைப்பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான "முழுநாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாவட்ட செயற்பாட்டுக் குழுவினை ஸ்தாபித்தல் நிகழ்வை ஆரம்பித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப் பொருளை எவ்வாறாயினும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி மிக உறுதியாக உள்ளார்.
அரசாங்கம் நடவடிக்கை
பாடசாலை மாணவர்களிடம் பரவியுள்ள போதைப் பொருளினையும் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றது.
மேலும், போதைக்கு அடிமையாகும் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதுடன் போதைப் பொருள் வியாபாரிகள் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர்.

அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு செயற்றிட்டங்களை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
கலந்துரையாடல்
மேலும், எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதியின் பங்களிப்புடன் இந்த போதை ஒழிப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது எனவும், போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதற்கு அனைத்து அதிகாரிகளதும் பொது மக்களின் பங்களிப்பும் தேவை என்றும், இது தொடர்பான ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டாமல் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என்றும் தெரிவித்து, போதைக்கு எதிரான செயற்பாட்டிற்கு அனைவரின் ஒத்துழைப்பினையும் நல்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan